சூர்யா (பிறப்பு - ஜூலை 23, 1975), தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். இவர் நடிகர் சிவகுமாரின் மகனும் "பருத்திவீரன்" புகழ்கார்த்தியின் அண்ணனும் ஆவார். மாறுபட்ட வேடங்களை ஏற்று நடிப்பதற்காகவும் நடிப்புத் திறனுக்காகவும் இவர் அறியப்படுகிறார். இருமுறை பிலிம்பேர் விருதுகளை வென்றுள்ளார். நடிகை ஜோதிகாவை விரும்பி செப்டம்பர் 11, 2006அன்று மணந்து கொண்டார்.இவருக்கு ஓர் பெண்குழந்தையும், ஓர் ஆண் குழந்தையும் இருக்கின்றனர்.